கிறிஸ்தும நற்செய்தி


தச்சனைக்கு பிள்ளையயன்றும் தாயயாருத்தி கன்னியயன்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமாரா !
என்ற கண்ணதாசன் வைர வரிகள் இயேசுவின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றது. கடவுள் மனிதராக மனுவுரு எடுத்தார் என்ற உண்மைக்கு எடுக்கும் விழா கிறிஸ்து பிறப்பு விழா. கடவுளுக்கு மனிதனுக்கும் இடையே அமைந்த உறவு விழா, கடவுள் மனிதர் ஆனார், நமக்காக ஏழையானார். இது மனிதனுக்கு வாழ்வு வழங்கும் விழா.

இது குழந்தைக்குயயடுக்கும் விழா. "ஒவ்வொரு குழந்தை பிறப்பும் கடவுள் இவ்வுலகின்மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை என்பதன் அடையாளம்" - கவி இரவிந்தர்நாத் தாகூர். கடவுள் குழந்தையாக வருகிறார் என்பது இது நிறைவேறுகிறது. மண்ணுலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் நம்பிக்கை துளிகள்.

இது பகிர்வுக்கு எடுக்கும் விழா. கடவுள் மக்களின் விடுதலைக்காக மகனை கொடுத்தார். மகன் தனது மக்களுக்கு தன்னை கொடுத்தார்.

பணக்காரன் : சகோதரா நான் உன்னை நேசிக்கிறேன்.
ஏழை : நீயாவது என்னை நேசிப்பதாவது. நீ உண்டு குடித்து கும்மாளம் அடிக்கிறாய். நானே வேலைக்கு உணவுயின்றி தவிக்கிறேன். நீ அடுக்கு மாடிக்கு மேல் நிற்கிறாய். நானோ வீடுகூட இன்றி தவிக்கிறேன். நீயாவது என்னை நேசிப்பாதாவது.

பணக்காரன் : இல்லை என்னை நம்பு. நான் உன்னை உண்மையாகவே நேசிக்கிறேன். 
ஏழை : நீ நேசிப்பதாக இருந்தால் நீ கீழே என் நிலைக்குவா. அல்லது என்னை உன் நிலைமைக்கு உயர்த்து

பணக்காரன் : அது கஷ்டம். கொஞ்சம் பிச்சை போடுகிறேன்.
ஏழை : பிச்சையும் எனக்கு தேவையில்லை, நீ அன்பு செய்வதையும் நான் 
நம்பதயாராகயில்லை.

பணக்காரன் : ஏன் நம்ம மாட்டாய்.
ஏழை : அன்பு இருக்கும் இடத்தில் வெறும் பிச்சையில்லை, சகோதர பகிர்வு 
இருக்கும், சம மகத்துவம் இருக்கும், தோழமை இருக்கும், தன்னிழப்பு இருக்கும்.


இந்த கிறிஸ்துவ பிறப்பு விழா அர்த்தம் பெறவேண்டுமெனில் ஏழைகள் வாழ்வுபெற, அடிமைகள் விடுதலைப் பெற பகிர்வோம். மகிழ்வோம்.