நல்ல மனம் - சிறுகதை

                “டாக்டர்! அவசரமா நீங்க என்னோட வரனும். அதிகமா காய்ச்சல் இருப்பதால் நோயாளியை இங்கே கூட்டிட்டு வர முடியலே!
                வந்தவர் பரபரப்பாக சொல்ல டாக்டர் அவரை வியப்பாக பார்த்தார். இப்போ. என் கிளினிக்குக்கு வந்தவங்களைப் பார்த்து கொண்டிருக்கேன். நான் உடனே நீங்க கூப்பிடுகிற இடத்திற்கு வரணும்னா எனக்கு பீஸ் மற்றும் நான் காரில் வருவதற்கான செலவு என முன்னூறு ரூபா தரனுமே?” என்றார்.
                “ஓ.கே. சார்! நீங்க கேட்கிற பீஸை தர்றேன். தயவு செய்து உடனே எங்ககூட புறப்படுங்க டாக்டர்!வந்தவர் அவசரப்படுத்தினார். டாக்டர் எழுந்தார். நர்சிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தார். கிளினிக் முன் நின்ற காரில் ஏறினார். வந்தவரும் டாக்டர் அருகில் உட்கார்ந்தார். கார் புறப்பட்டது.

                “உங்க பேரு என்ன? நாம இப்போ எந்தத் தெருவுக்கு போகனும்?” டாக்டர் கேட்டார். என் பேரு ஜேம்ஸ் சார். நான் வழி சொல்றேன். அப்படியே போங்க! நேரே போய், இடது பக்க சாலையில் திரும்புங்க!ஜேம்ஸ் சொன்ன வழியில் காரை செலுத்தினார் டாக்டர். கோவில் வாசல் பகுதி வந்தது. அப்படி ஓரமா நிறுத்துங்க டாக்டர்!கோவில் வாசலை தாண்டி காரை ஓரமாக நிறுத்தினார் டாக்டர். என்னங்க! கோவில் வாசல் காரை நிறுத்தச் சொல்றீங்க? பே­ண்ட் இங்கேயா இருக்கார்?” காரை விட்டு வெளியே வந்தபடி கேட்டார் டாக்டர்.

                “அதோ அவர்தான்... அவருக்கு தான் காய்ச்சல். அவருக்கு பார்க்கத்தான் உங்களை கூப்பிட்டு வந்தேன். ஜேம்ஸ் சுட்டிக் காட்டிய திசையை பார்த்தார், டாக்டர். அங்கே ஒரு பிச்சைக்காரர் காய்ச்சலில் சிக்கி கை, கால் முடக்கி படுத்துக் கிடந்தார். அந்த பிச்சைக்காரரையும், தன்னை கூட்டி வந்த ஜேம்ஸையும் மாறி மாறி பார்த்தார் டாக்டர். ஜேம்ஸ்க்கு ஒரே உதறல். பிச்சைக்காரர் என்பதால் சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்து விடுவாரோ என்று மிரண்டார்.

                “டாக்டர்! நான் கோவிலுக்கு வந்த இடத்தில்தான் இந்த பிச்சைக்காரரை பார்த்தேன். முக்கல் முனகலுடன் கவனிப்பாரற்று காய்ச்சலால் கஷ்டப்படுவதை பார்த்தேன். அதனால்தான் உடனே உங்களை இங்கே கூட்டி வந்தேன்!கெஞ்சலாக சொன்னார் ஜேம்ஸ். உடனே டாக்டர் நேராக அந்த பிச்சைக்காரர் பக்கம் போய் கிசிச்சையை ஆரம்பித்தார்.

                ஒரு ஊசியை போட்டு, சில மாத்திரைகளையும் அந்த பிச்சைக்காரரிடம் கொடுத்து சாப்பிட வேண்டிய முறையை சொன்னார்.

                பின்பு ஜேம்ஸ் பக்கம் போய் அப்போ நான் புறப்படுகிறேன்!என்றார். ஜேம்ஸ் தன் பையில் இருந்து முந்நூறு ரூபாயை எடுத்து டாக்டரிடம் நீட்டினார். அதை வாங்க மறுத்த டாக்டர் வேண்டாம்! எனக்கு பீஸ் எதுவும் வேண்டாம். இந்த பிச்சைக்காரர் உங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. ஒரு மனிதாபிமானத்தில் என்னை அழைத்து சிகிச்சை பார்க்க வச்சீங்க! எனக்கும் மனிதாபிமானம் இருக்கு! நான் புறப்படுகிறேன்என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார் டாக்டர்.

                ‘இந்த உலகத்தில் மனிதாபிமானத்திற்கு இன்னும் குறைவில்லை. இரக்கமும் சேவை மனப்பான்மையும் இருக்கவே செய்கிறது. ஜேம்ஸ் மனதில் புதுத் தெளிவும், நம்பிக்கையும் பிறந்தது.
- D.ஸ்டெபி, PMB 1084.