பஞ்சாயத்துராஜ் அமைப்பு

இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் நிலைதான் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் வாழ்வதற்கான குறைந்தபட்ச தேவைகள்கூட கிடைக்கப்பெறாத நிலையை தொடர்கின்றனர். (உழைப்பிற்கேற்ற கூலி, குறைந்தபட்ச அடிப்படை அவசியத் தேவைகளான உணவு, குடிநீர், கல்வி, சுகாதாரம் போன்றவை)
கடந்த அரை நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள நவீன மயம், சமூக பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சி ஆகியவை வறுமையை போக்குவதற்கு பதில் வறுமையின் நிலையை அதிகரிக்கச் செய்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதலால் கடைபிடிக்கப்படும் பொருளாதார கொள்கைகள் ஏழை உழைப்பாளர்களின் வாழ்வுரிமையை பறித்து வருகின்றது. சுற்றுச் சூழல், உயிர் சூழல் நிலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்வுரிமை பெரிதும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது.
இந்த சமுதாய அமைப்பு இறுக்கமான, முரண்பாடுள்ள, ஏற்றத் தாழ்வுள்ளதாக உள்ளது. வாங்குபவன் கொடுப்பவன் உறவுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடுவது, பெட்டிசன் (மனு) போடுவது, பயனாளியாக இருப்பது என்றுதான் மக்களை பழக்கி இருக்கின்றோம். குடிமக்களாக (விவரம் தெரிந்தவர்களாக) பழக்கவில்லை. சுதந்திரம் வாங்கியும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. நிறைய பேருக்கு சினிமாவை பற்றி, கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்திருக்கின்ற அளவிற்கு அரசியல் சட்டம் பற்றி தெரியவில்லை. உலக அரங்கில் இந்தியா பொருளாதார கட்டமைப்பில் 8வது இடம், மனிதவள மேம்பாட்டில் 127 மிலி 137வது இடம். ஆனால் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டிய இடத்தில் இல்லை.
உள்ளாட்சி வரலாறு :-
இந்தியாவில் உள்ளாட்சி வரலாறு என்பது நூற்றாண்டுக்கு மேல் கொண்டது.  தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகள் இருந்துள்ளன. 1871ல் உள்ளாட்சிகள் நிதி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1884ல் சென்னை உள்ளாட்சி மன்றங்கள் சட்டம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி சுய அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டமாக அமைந்தது. 1907ல் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகார பரவலாக்கத்திற்கான ராயல் ஆணையம் (யூலிதீழியி உலிதுதுஷ்விவிஷ்லிஐ க்ஷூலிr deஉeஐமிrழியிஷ்விழிமிஷ்லிஐ) உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக 1920ல் உள்ளூர் வாரியங்கள் சட்டம் சென்னை கிராம ஊராட்சிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிந்தைய கால கட்டங்களில் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தின் போது உள்ளாட்சிகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அதாவது ஒரு சுதந்திர நாட்டின் அரசியல் கட்டமைப்பு கிராமத்தை ஆதாரமாகக் கொண்டு அமைந்தால்தான் அது வலுவான அஸ்திவாரமாக அமையும். அதாவது வலுவான கிராம பஞ்சாயத்துகளின் அதிகார பரவலாக்கல் என்பது கிராமத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும். அதன் அடிப்படையில் 1948 நவம்பர் 22ல் அரசு நெறிமுறை கோட்பாடுகளின் கீழ் ஊராட்சிகளை அமைத்துருவாக்கல் (நுrஆழிஐஷ்விழிமிஷ்லிஐ லிக்ஷூ ஸஷ்யியிழிஆe ஸ்ரீழிஐஉஜுழிதீழிமிவி) அமைந்தது. பல்வேறு ஆய்வுகள், கோரிக்கைகளின் விளைவாக பண்டித நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது 1958ல் மத்திய அரசால் பலவந்தமாய் மேத்தா தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அதிகார பகிர்வு தேவை என்றும், சமுதாய வளர்ச்சிப் பணிகளிலும், தேசிய விரிவாக்கப் பணிகளிலும் பொதுமக்களுடைய பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென்றும், இவற்றில் அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கூறியது. இந்தப் பின்னனியில் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் கூட்டம் 1958ல் உருவாக்கப்பட்டன.
அதிகார பரவலாக்கம் :-
“சுதந்திரம் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக விளங்கிட வேண்டும். ஒவ்வொரு குடியரசும் சுயமாக தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் அகில உலகத்திற்கு எதிராக தன்னை காத்துக் கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேல்மட்ட அமைப்புகள் வழிகாட்ட வேண்டுமேயல்லாமல் ஆணையிடக் கூடாது. அதிகார பரவல் இருக்க வேண்டும்” என்றார் தேசபிதா அண்ணல் காந்தியடிகள். “வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடவும், செயல்படுத்துவமான பொறுப்பினை மக்களிடமே ஒப்படைத்துவிட வேண்டிய நேரம் வந்து விட்டது” என்றார் பண்டிதர் நேரு.
ராஜீவ் காந்தி கனவு :-
மக்களை மதித்தல், மக்களை நம்புதல், அவர்களை அதிகாரப்படுத்துதல், அவர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயம் செய்தல்.
அதிகார பரவலாக்கலின் அடிப்படை :-
- மக்களின் சுய மரியாதையை பாதுகாத்தல்.
- அரசியலில் மக்களின் நெருக்கம் அதிகமாக இருக்க வேண்டும்.
- பயனாளி அல்ல குடிமகன் என்ற உணர்வு வரவேண்டும்.
- அரசிற்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
- மக்கள் பார்வையாளராக வைக்கப்பட்டிருக்கிறார்கள். பங்கேற்பாளர்களாக வைக்கப்பட வேண்டும்.
- முன்னேற்றத் திட்டத்தில் மக்கள் பங்கேற்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.
- அடிப்படையில் ஜனநாயகம் கீழிருந்து வரவேண்டும்.
- மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
- ஒளிவு மறைவற்ற நிர்வாகம் இருக்க வேண்டும்.
- தீர்மானிப்பதில் குடிமக்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
- சமூக நீதி, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.
- திட்டமிடல் கீழிருந்து வரவேண்டும்.
- மக்களின் திறன் வளர்க்கப்பட வேண்டும்.
1984ல் பாரதப் பிரதமராக இருந்து இந்திராகாந்தியின் மறைவிற்கு பிறகு பதவியேற்ற ராஜீவ் காந்தி மக்களை அதிகாரப் படுத்தல், பரவலாக்கல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அதன் அடிப்படையில் மாநில முதல்வர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோரிடம் விரிவாக விவாதம் நடத்தினார்.
விவாதங்களின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டவைகள் :- (Diagnosis)
- பொறுப்பான நிர்வாகம் இல்லை.
- மக்கள் விளிம்பில் (கடைக்கோடியில்) இருக்கிறார்கள்.
- அதிகார தரகர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
- வலுவான மத்திய மாநில அரசுகள், ஆனால் பலவீனமான ஜனநாயகம்.
- தலித்துகள், மலைவாழ் மக்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளனர்.
- திறமையற்ற, கருணையற்ற, அனுபவமற்ற கொடூரமான நிர்வாகம்.
- மிகக் குறைந்த அளவில் சேவை.
- அதிகமான நிர்வாக செலவுகள்.
- அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை.

ஆலோசனை :-
- நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் (Representative administration)
- பெண்கள் மற்றும் விளிம்பில் உள்ளவர்களை இணைத்தல் (Inclusion of women & marginal)
- அடிப்படையிலிருந்து வழிமுறை உருவாக்குதல் (Creation of system at the grass root)
- முன்னேற்ற கண்ணோட்டம்.
- ஜனநாயக வழிமுறைகள்.
- ஏழைகளுக்கான செயல்பாடு.
- கீழிலிருந்து திட்டமிடல்.
- சமூக பொருளாதார முன்னேற்றம்.

தீர்வு :-
புதிய பஞ்சாயத்துராஜ் திட்டம் :-
மாநிலப் பட்டியலில் இருந்து வந்த பஞ்சாயத்து அமைப்பு பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு 64 வது சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்ட திருத்தம் போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனையை முன்வைத்து தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் நரசிம்மராவ் பிரதமரானவுடன் 1992ம் ஆண்டு 73வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசியல் சட்டம் :
3 முக்கிய பிரிவுகள் :
1. சட்டத்துறை - சட்டமன்றங்கள், பாராளுமன்றம்.
2. நிர்வாகத்துறை
3. நீதித்துறை

சட்டமன்றங்கள் :-
மாநில சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.

மாநில பட்டியல் துறைகள் :-
(1) காவல்துறை (2) பொதுப்பணித்துறை (3) விவசாயம் (4) கூட்டுறவு (5) சாலை போக்குவரத்து (6) கள், சாராய வரிவிதிப்பு (7) விற்பனை வரி (8) சினிமா சம்பந்தப்பட்ட வரிகள்.
பாராளுமன்றம் :-
மத்திய பட்டியலில் உள்ள துறைகள் சம்பந்தப்பட்ட  சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.

மத்திய பட்டியல் :-
(1) ராணுவம் (2) ரயில்வே (3) சுரங்கம், (4) தபால் தந்தி, தொலைபேசி (5) வங்கி மற்றும் இன்சூரன்ஸ் (6) சுங்கவரி (7) வருமானவரி (8) கம்பெனி நிர்வாகம் (9) தேசிய நெடுஞ்சாலை (10) அணு ஆயுதம்.

பொதுப் பட்டியல் :-
(1) கல்வி (2) சில வரிகள் (3) வேலை வாய்ப்புத் திட்டங்கள்.

பொதுப் பட்டியலில் உள்ள சட்டங்களை பாராளுமன்றமும், சட்டமன்றமும் இயற்றலாம், பாராளுமன்றத்தின் அதிகாரம் சற்று அதிகம். சட்டமன்றங்கள் மத்திய அரசை மீறிய செயல்களில் ஈடுபட முடியாது. 1992ல் அரசியல் சாசன 73வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

73வது சட்ட திருத்தம் - கிராமங்கள் சம்பந்தப்பட்டது.
74வது சட்ட திருத்தம் - நகரங்கள் சம்பந்தப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் தற்போதைய பஞ்சாயத்துராஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1993 ஏப்ரல் 20ல் மாநில பட்டியலில் இருந்து வந்த பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1958ம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994 ஆனது, 73வது சட்ட திருத்தத்தில் உள்ள அனைத்து விதிகளும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்திற்கு பொருந்தும்.
(தொடரும்...)
- A.சந்தியாகு, CCO