பசியின் குரல்...

சட்டங்கள் போடுவதும் திட்டங்கள் தீட்டுவதும்
தேசியவாதிகளின் தினசரி கூப்பாடுகள்!

வறுமையும் வன்முறை வெறியாட்டமும்
ஏழைகளின் வாழ்க்கையிலே அன்றாட அவலங்கள்!

காவல் காக்க நிலையங்கள் நீதி சொல்ல மன்றங்கள்
லஞ்சமும் ஊழலும் குற்றங்களும் கொலைகளும்
தினசரி பத்திரிகை செய்திகள்!

இந்திய மண் அடிமாட்டு விலைக்கு
ஏகபோக கம்பெனியிடம் அடகு போகும் அற்புத திட்டம்

யார் வாழ்வு சிறக்க யாருக்கான திட்டம் ?!

எங்கோ கேட்கிறது ...
ஏழையின் அழுகுரல்
அம்மா பசிக்குது !!
- து.அ.ஜார்ஜ்