“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா”
மகளிர்தினம் பிறந்த கதை :-
1857 ஆம் ஆண்டு மார்ச்-8 ஆம் தேதி அமெரிக்கா ஆலைகளில் உழைக்கும் மகளிர் ஒன்று சேர்ந்து உழைப்புக்கேற்ற ஊதியம் தொழில் உரிமை, மனித உரிமை போன்றவற்றிற்காகப் போராடினர்.
1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக தொழிலாளர்கள் மாநாட்டில் ‘கிளாரா’ என்பவரின் கோரிக்கைக்கு இணங்க மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர்தினமாக அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் நடைமுறைக்கு வந்தது.
1975 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தை அகில உலக மகளிர்பத்தாண்டுகள் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உலகெங்கும் மகளிர் உரிமை எழுச்சிக்கு வித்திட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகளிர் பெருமை / உரிமைகள் இப்போது உலகறியச் செய்யப்பட்டு வருகின்றன.
மகளிர் தினத்தில் மனதில் எழுந்த சிந்தனைகள் :-
மார்ச் மாதம் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு அங்கு எனாதபடி எங்கும் மகளிர்க்கு தனி மரியாதை தரப்படும் நேரம் நெருங்கிவிட்டது. உரிமைகள் ஒடுக்கப்பட்டு மனம் நொறுங்கி கிடந்த மகளிர்க்கு உலகளவில் அங்கீகாரம் கிடைப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எட்டாக்கனியாக இருந்த எத்தனையோ மகளிருக்கு இன்று சுலபமாகக் கைக்கூடும் காலம் கனிந்து விட்டது. துணிந்து பல துறைகளில் தங்கள் சாதனைகளைத் தொடர்ந்து செய்து வரத் தொடங்கிவிட்டார்கள். முடங்கி கிடந்த மகளிர் முழு மூச்சுடன் தங்கள் அறிவாற்றல்களை வெளி உலகிற்கு காட்டி அசத்த ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களை கிள்ளுக்கீரையாக எண்ணி நகையாடிய காலம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. பெண் சாதனையாளர்கள் உலகை பிரமிக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு பெருமை தரக்கூடிய பிரகாசமான காலம் இது. நம்மால் எதுவும் முடியுமென நம்பிக்கைத் துளிர் விட துவங்கிவிட்டது. இந்த நம்பிக்கை பலப்பட வேண்டும். பரவலாக்கப்பட வேண்டும். இதனை நினைவுறுத்த, நிலை நாட்ட சர்வதேச மகளிர் தினம் நமக்குத்துணை நிற்குமென நாம் நம்பலாம். மகளிர் எழுச்சி இன்று மகத்தான ஒன்றாகும். பழமைவாதிகள் அதனை பகிரங்கமாக எதிர்ப்பு காட்ட துணிவில்லாத பலவீனப்பட்டுள்ளனர். இருந்தாலும் அங்கும் இங்கும் சந்து பொந்துகளிலும் ஒதுக்குப்புறமான இடங்களிலிருந்து பெண்களுக்கு எதிராக ஓலம் இடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மகளிரின் ஒருமித்த குரலாலும், உரத்த செயல்பாடுகளாலும் மகளிர் உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்/சிரமங்கள், பாலியல் கொடுமைகள், பல வழிகளில் மகளிருக்கு எதிரான எழும் கொடுமைகள் அடையாளம் கண்டறியப்பட்டு அதற்கான சீரிய செயல்திட்டங்களை உருவாக்கவும், தீட்டிய தீட்டங்கள் தெளிவான முறையில் நடைமுறைப்படுத்தவும், மகளிர் இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஓர் அணியில் நின்று திடமாக போராட வேண்டும்.
நமக்குத்தான் எல்லா உரிமைகளும் ஒவ்வொன்றாக வந்துவிட்டதே! வரப்போகிறதே! என்று வாளாதிருந்துவிட்டால் காலம் காலமாக போராடிப் பெற்ற உரிமைகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்பதையும் நம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதேசமயம், முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் போராட்டம் என்று ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆணும், பெண்ணும் இணைந்து ஒற்றுமையாக உழைத்தால் சமூக பொருளாதார மறுமலர்ச்சி பூரணமாக நிறைவேறும்.
பெண்ணாக பிறக்க வேண்டுமென்ற சீரிய சிந்தனை இந்த சர்வதேச மகளிர் தினத்தில் உருவாக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
- G.சிவக்குமார், CO
மகளிர் திட்டம்