உரிமை கீதம்...

பாரத தேசம்
பழம் பெரும் தேசம்...
ஆம்!
மொழியால் - இனத்தால்
நாம் வேறுபட்டாலும்
இந்தியன் என்ற உணர்வில்
அனைவரும் ஒரே இனம்...!
அதுதான் மானுட தத்துவம்...
ஆனால் ஏனோ...
இயற்கையின் நன்கொடை
‘நீரில்' மட்டும் பிரிவினை...
கூட்டு குடிநீர் திட்டத்தில்
குறுக்கே நிற்கும் சதிகாரக் கூட்டம்...
உயிர் வாழ
பயிர் வளர
மண் மலர...
உன்னத ஆற்று நீர்
அனைவருக்கும் பொதுமை...
எனக்கு மட்டுமே
நீர் சொந்தம்
இது சுயநல போக்கின்
உச்சக் கட்டம்...
இது நம் தேச பக்திக்கு
வைக்கும் வேட்டு...
ஒட்டுக் கட்சிகள்
ஆட்சி பீடம் ஏற
திட்டமிடும்
அரசியல் தந்திரம்...
அன்பு சகோதரமே
நம்பி கெட்டது போதும்...
நம் தேச ஒற்றுமை நூலில்
ஒன்றாக இணைவோம்
நதி நீர் யாவும்
பொதுவுடைமை என
வீரமுழக்கமிடுவோம்
உரிமைக்கு போராடுவோம்...
பூமி பந்து
பொது என போற்றுவோம்


D.A.ஜார்ஜ், KMSSS