தகவல் அறியும் உரிமைச் சட்டம்

பல நிலைகளில் உள்ள அலுவலர்கள் எடுக்கும் முடிவுகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்காதது தான் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மக்களாட்சி மாண்பை இந்திய அரசு கொண்டிருந்த போதிலும் இதுவரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயக முறை அரசின் திட்டமிடல் செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பை தனிமைபடுத்தியே வந்துள்ளது. இதனால் மக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்புடையதாக செயல்பட வேண்டிய அரசு திசைமாறி பொறுப்பற்ற தன்மை கொண்டதாக வெளிப்படையற்ற செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டு மக்கள் விரோத அரசுகளாகவே நடைபெற்று வந்ததை / வருவதை காண முடிகிறது.
பல்லாண்டு காலமாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மை தேவை என்றும், மக்களுக்கு நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமையை பெற தகவல் பெறும் உரிமைச் சட்டம் தேவை என்பதை பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. மக்களால் மக்களைக் கொண்டு, மக்களுக்கான நடத்தப்படும் ஆட்சியே மக்களாட்சி. ஆனால் இந்த நாட்டு மக்களில் 50% பேருக்கு குடிக்க கஞ்சியில்லை. அதன் காரணம் என்ன என்பது அவர்களுக்கே தெரியாது.
பாரதி பாடினானே,
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம்

இல்லையேன்னும் அறிவுமில்லார்
அந்த நிலை இனிமேல் மாறும் நிலை ஏற்படும். அதற்கு காரணம் தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். மக்கள் தங்களுக்கு உள்ள உரிமைகள், வாய்ப்புகள், சலுகைகள் என்னென்ன என்ற தகவல் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தின் பொது தேவைகளுக்கான உரிமைகள், தேவைகள் அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டங்கள், அத்திட்டங்களை நிறைவேற்ற வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி, அந்த நிதி செலவிடப்படும் விதம் - அதற்கான மேற்பார்வை - கண்காணிப்பு முறைகள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை மறுக்கப்படும் பொழுது அவற்றிற்காக குரல் கொடுப்பார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு சாலையையோ அல்லது பாலத்தையோ அமைக்கும் பணி சரியாக நடைபெறவில்லை என்றால் என்ன நடக்கும் என்றும் தெரிந்தும் அது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இப்பொழுது முடியும் தகவல் உரிமை சட்டத்தின் வழியாக. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தின் தேவையை பல
  நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்புகளில் சுட்டிக் காட்டிய பொழுதும் மத்திய அரசு இதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் மாநிலம் தமிழகம். 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் நாள் 1997-98-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டன. 1997-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் அச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. காரணம் அச்சட்டம் 21 விதிவிலக்குகளை சுட்டிக் காட்டியது. 12 ­ரத்துகளை தெளிவாக வரையறை செய்யவில்லை. தனியார் அமைப்புகள் பற்றி குறிப்புகள் இல்லை. ஆனால் அச்சட்டம் அகில இந்திய அளவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வர வழிகாட்டியாக அமைந்தது.
2002-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திரு. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசால் தகவல் அறியும் சுதந்திர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அம் மசோதா சட்டமாகவில்லை. 2004-ல் புதிய அரசு (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா தயாரானது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் பலவீனமானது. தேசிய ஆலோசனைக் குழு தலைவர் திருமதி. சோனியாகாந்தி தலையிட்டு தங்கள் குழு அளித்த 62 பரிந்துறைகளையும் அச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சட்ட முன்வடிவாக திரு. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 148 திருத்தங்களுடன் பரிந்துறை செய்தது. பிரதமரால் நியமிக்கப்பட்ட திரு. பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர் நிலைக்குழு ஆய்வு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2005 ஜுன் 15-ந் தேதி நிறைவேற்றப்பட்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
முதல் முறையாக ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாக கருதப்படும் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தையும் இந்த நாட்டின் குடிமக்கள் எல்லா துறைகளிலும் தகவல்கள் பெறலாம்.
இந்நாள் வரையில் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் தங்களுக்குள் மூடி வைத்திருந்தனர். ஆனால் இச்சட்டத்தின்படி குறித்த காலத்தில் தகவல் தர மறுத்தாலோ அல்லது தவறான தகவலை அளித்தாலோ அல்லது குறைவான ஆவணங்களையோ, தவறாக திசை திருப்பும் அதிகாரிக்கு றீeஉமிrஷ்லிஐ 7(1)-ன்படி ஒரு நாளைக்கு ரூ. 250/- முதல் ரூ. 25,000/- வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
எடுத்துக்காட்டாக தங்களுக்கு வழங்கப்பட்ட ரே­ன் எவ்வளவு ஒரு திட்டத்திற்கு செலவிட்ட தொகை எவ்வளவு என்றும் விவசாயிகள் தங்களுக்கு அரசு அளிக்கும் இலவச
திட்டம், மான்யம் எவ்வளவு, அதிகாரிகள் செலவிட்ட தொகை எவ்வளவு என்றும் கேட்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெற முடியாதது :
இச்சட்டம் Section (24)4-ன்படி மத்திய மாநில அரசால்
- அறிவிக்கப்பட்ட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பொருந்தாது.
- நீதித்துறையால் தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகள்.
- தகவல் வெறியிடுவதால் மக்கள் சபை மற்றும் மாநில சட்டசபைகளில் உரிமை
மற்றும் தனி சுதந்திரத்தை பறித்தல்.
- வாணிக ரகசிய தகவல்கள், வாணிக ரகசியங்கள் அல்லது ரகசிய சொத்துக்கள்,
- ஜம்மு - காஷ்மீர் அரசை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.
தமிழக நிலை :
மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் தனியாக தகவல் உரிமைச் சட்டம் இயற்ற தடை ஏதுமில்லை. தமிழக அரசு சட்டம் ஏதும் இயற்றவில்லை. மத்திய அரசின் விதி விலக்கு பல இருக்கிறது. மேலும் தமிழக அரசு 33 விதி விலக்குகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு அந்தந்த துறை அதிகாரிகளை தகவல் அதிகாரிகளாக நியமிக்காமல் உதவி பொது மக்கள் தகவல் அதிகாரிகளாக நியமித்துள்ளது. தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையே நியமித்துள்ளது.
தகவல் பெற கட்டணம் :
மத்திய அரசு தகவல் பெற கட்டணம் ரூ. 10/- நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ. 50/- நிர்ணயம் செய்துள்ளது. றீeஉமிஷ்லிஐ (6)-ன் படி விண்ணப்பமும்
ரூ. 50/- க்கான பணம் (அ) வங்கி வரைவோலை (ம்.ம்.) அல்லது காசோலையாக மத்திய பொது தகவல் அதிகாரியின் பெயரில் எடுக்க வேண்டும். பேப்பர் பு4 (அ) பு3 அளவுக்கு ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ. 2/- செலுத்த வேண்டும். ஒரு ஆவணத்தை நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது. பின்பு ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ. 5/- வசூலிக்கப்படும்.
- தகவல்களை பிளாப்பி அல்லது கணினி டிஸ்கில் கொடுப்பதற்கு ரூ. 15/- வசூலிக்கப்படும்.
- பிரிண்டிங் கொடுப்பதற்கு அந்தந்த பிரிண்டரின் செலவை பொறுத்துதான்.
தகவல் என்பது :

- பதிவேடுகள் (Record) - உத்தரவு (Order)
- ஆவணங்கள் (Documents) - பயண விவரம் (Log Books)
- விளக்கம் (Memo) - ஒப்பந்தம் (Contract)
- இமெயில் (Email) - அறிக்கை (Report)
 - கருத்து (Opinion) - மாதிரிகள் (Models)
- பரிந்துரை (Recommendation) - கணினி டேட்டா
- பத்திரிக்கை அறிக்கை - தனியார் பொது துறையாக
- சுற்றறிக்கை (Circular) இருந்தால் அதன் தகவல்
- கோப்பு இல்லாத தகவல்களுக்கு பொருந்தாது
தகவல் அறிதல் என்பது
- வேலைகள் கண்காணித்தல், ஆவணங்கள், பதிவேடுகள், சான்றிதழ்கள் இவற்றிலிருந்து குறிப்பு எடுத்தல்.
- சான்றிதழ் நகல் எடுத்தல்.
- தகவல்களை பிரிண்ட் எடுத்தல்.
- கேசட்டுகளில், வீடியோவில் பதிவு செய்தல்.
தகவல் அதிகாரிகள் :
தேசிய அளவில் :
தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தஸ்திற்கு இணையாக தலைமை தகவல் ஆணையர்.
மாநில அளவில் :
தலைமை செயலர் அந்தஸ்திற்கு இணையாக தçலைமை தகவல் ஆணையர்.
- மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு துறை சார்பிலும் தகவல் அதிகாரிகள்.
- பஞ்சாயத்து சம்பந்தமாக தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் மூலமே பெற வேண்டும்.
- மற்ற துறைகளில் அதற்கென அந்தந்த துறை சார்ந்த உதவி தகவல்
அதிகாரியின் மூலம் பெற முடியும்.
தகவல் பெறுதல் :
Section 5 - Subsection (2)ன் படி விண்ணப்பித்த நபர்களுக்கு மத்திய பொது தகவல் அதிகாரி அல்லது மாநில பொது தகவல் அதிகாரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவோ அல்லது அதை தக்க காரணங்களுடன் திருப்பி அனுப்ப வேண்டும். கேட்கும் தகவல் ஒருவருடைய வாழ்க்கைக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ கேட்கப்பட்டிருந்தால் விண்ணப்பம் வந்து 48 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்கப்பட வேண்டம்.
தகவல் மறுப்பதற்கு காரணம் :

Sub section (1)ன் படி தகவலை கொடுப்பதை மறுப்பதற்கு மத்திய அல்லது மாநில தகவல் அதிகாரி மனுதாரருக்கு
1. மறுக்கப்பட்டதற்கான காரணங்கள்.
2. எத்தனை நாட்களுக்குள் மறுக்கப்பட்ட நாளிலிருந்து மேல் முறையீடு
செய்யலாம்.
3. மேல் முறையீட்டு அலுவலகத்தின் விவரம்.
போன்றவை தெரிவிக்க வேண்டும்.
 
தகவல் பெற மாதிரி விண்ணப்ப படிவம்

 To,
The Assistant Police Commissioner,
(or)
Public Information Officer,
1. Name of applicant 

2. Address 

3. Particulars of information required
(i) Subject matter of information 
(ii) Period to which the information relations  to 
(iii) Description of information required 
(iv) Whether information is required by post or in person 
(v) In case of post (ordinary, Registered or speed) 

4. Whether the Applicant is below poverty Line : 
(of yes attach a photo copy of the proof there of)
Place :
Date :                   Signature of the Applicant

தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS.