இயற்கை சீற்றங்களும், மறுவாழ்வு பணிகளும்...

பெருமளவில் மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் அளவில்லா சேதங்களையும் பின்விளைவுகளையும் எதிர்பாராத வகையில் ஏற்படுத்தும் ஒரு சம்பவமே பேரிடர் (லிr) இயற்கை சீற்றம் எனப்படும்.

இயற்கை சீற்றங்கள் இரண்டு வகை உள்ளன.

1. இயற்கை பேரிடர்
2. மனிதரால் ஏற்படும் பேரிடர்

இயற்கை பேரிடர் :

புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, வறட்சி, ஆழிப்பேரலை (சுனாமி), இடி மின்னல் போன்றவை கடுமையான வெயில் தாக்கம், தீ விபத்து சாலை விபத்து.

மனிதனால் ஏற்படும் பேரிடர் :

சுற்றுச்சூழல் மாசுபாடு, அணுக்கதிர் வீச்சு, தீவிரவாத தாக்குதல், இனக்கலவரம், மதக்கலவரம், தொற்றுநோய், சாலை விபத்து.

நிலநடுக்கம் (பூகம்பம்)
நமது பூமியின் விட்டம் 12, 756 கி.மீ ஆகும். நடுவில் உட்கருவான ளீலிre உள்ளது. பூமியை சுற்றியுள்ள கவசத்தில் (Mantle) ஆரம் 2,700 கி.மீ இது தீக்குழம்பு (Magma) போன்று உள்ளது. இதன்மேல் வசிக்கும் பூமி தட்டின் ஓடுகள் (Crust) உள்ளது. பூமி மேல் ஓட்டின் உயரம் 25 முதல் 70 கி.மீ. வரை உள்ளது. பூமி ஒரு மணி நேரத்தில் 529.75 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. சூரியனை வினாடிக்கு 29.78 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. பூமியின் மேல் பகுதி மிகப்பெரிய 7 பூமி தட்டுகளாக உள்ளன.
 1. வட அமெரிக்கா தட்டு,
 2. தென் அமெரிக்கா தட்டு,
 3. ஆப்பிரிக்கா தட்டு,
 4. யுரேசியா தட்டு
 5. பசிபிக் தட்டு
 6. ஆஸ்திரேலியா தட்டு (இந்தியாவில் உள்ளது)
 7. அண்டார்டிகா தட்டு
நிலத்தடியில் உள்ள தட்டுக்களை கண்டத்தட்டு என்றும் சொல்லலாம். பூமி தட்டுக்கள் பல திசைகளில் நகர்கின்றன. நகர்வதால் ஒன்றை ஒன்று எதிர்த்து இடித்துக் கொள்கின்றன. இதேபோல் கண்டத் திட்டும் கடல் திட்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது நிலம் உயர்ந்து மணல் தொடர்கள் உருவாகும். கடலில் ஆழமான பள்ளம் ஏற்படலாம்.

எரிமலை :
பூமி தட்டுக்களுக்கு கீழ் உள்ள கதிரியக்க பொருட்களின் அழிவினாலும் பூமி தட்டுக்களின் முனைப்பகுதி உரசுவதாலும் அதிக வெப்பம் உருவாகி பூமி தட்டுக்களை நகரவும் வெடிக்கவும் செய்கின்றன. இது எரிமலையாகும்.

நிலநடுக்கம் :
இந்திய துணைக்கண்டமானது இந்திய நிலத்தட்டின் மேல் அமைந்துள்ளது. இந்த தட்டு வருடத்திற்கு 5 செ.மீ அளவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு யூரே´யா விளிம்பை ஒட்டியும், மேல்தட்டின் விரிசல்களை ஒட்டியும் ஆங்காங்கே நில நடுக்கம் ஏற்படுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் குஜராத், உத்ராஞ்சல், அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

சுனாமி :
ஆழ்கடலின் அடிப்பரப்பில் எந்த ஒரு இடமாவது பூகம்பத்தாலோ எரிமலை வெடிப்பினாலோ, விண் கற்கள் விழுவதாலோ பாதிக்கப்படும்போது ஏற்படும் மிகப்பெரிய கடல் அலையே ஆழிப்பேரலை சுனாமி எனப்படும். இது அடுக்குக்கடுக்கான மிக நீண்ட உச்சியுள்ள அலைகளை கொண்டு அலை தொகுப்பு ஆகும். சுனாமியின் வேகம் அது செல்லும் கடல் நீரின் ஆழத்தை பொறுத்து அமையும். பொதுவாக சுனாமி மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் 5,000 கி.மீ ஆழத்திலும் பயணம் செய்யும்.

புயல் :
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய கடற்கரை ஓரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடங்கி மேற்கே (நுr) கிழக்கே நகரும்போது அது புயலாக மாறுகிறது.

இந்தியாவின் புயல் காலம் :
 • மே முதல் ஜுன் வரை - கோடை காலம்
 • அக்டோபர் முதல் டிசம்பர் வரை - மழை காலம்
இந்திய நிலப்பரப்பில் 8 % புயல் ஆபத்து உள்ளது. இந்தியாவில் 8041 கி.மீ. கடற்கரை பகுதி உள்ளது.

புயல் வகைகள் :
 1. குறைந்த காற்றழுத்தம் காற்றின் வேகம் - 31 கி.மீ.
 2. அழுத்தம் காற்றின் வேகம் - 31- 41 கி.மீ.
 3. பேரழுத்தம் காற்றின் வேகம் - 50 - 60 கி.மீ.
 4. சுழல்காற்று (புயல்) - 62 - 78 கி.மீ.
 5. கொடுஞ்சுழல் காற்று (புயல்) - 89 - 118 கி.மீ.
 6. பெருஞ்சுழல் காற்று (புயல்) - 119 - 221 கி.மீ.
 7. மா சுழல் காற்று - 221 -க்கு மேல்

வெள்ளம் :
ஆற்று, நகர்புறம், கடற்கரை, திடீர் வெள்ளம், ஒரு குறுகிய பருவத்தில் தொடர்ச்சியாக பெய்யும் 3 - 4 மாதங்களில் பெய்யும் மழையின் அளவு 76 % மழையே வெள்ளத்திற்கு காரணம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் 40 கோடி ஹக்டேர் நிலமும் பல லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 0.45 மில்லியன் ஹக்டேர் பரப்புடைய நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கும் மாவட்டங்கள் ஆகும்.

வெள்ளத்திற்கு காரணம் :-
நிலப்பகுதியில் உள்ள தண்ணீர் ஆற்றுத்தண்ணீர் ஏதோ ஓர் ஆதாரத்திலிருந்து மேல்மட்ட நீர் வழக்கத்திற்கு மாறாகவும் வேகமாகவும் வருதல் மற்றும் மண் சேற்றின் ஓட்டம் ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் மண் சரிவு ஏற்படுதல் ஆகும்.

புவி வெப்பம் :
கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயுமண்டலம் சூடாகிறது.

ஆபத்து :
 • பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம்.
 • மழைக்குறைந்து குடிநீர் பற்றாக்குறை பஞ்சம் பட்டினி அதிகரிப்பு
 • நோய்கள் பரவுதல்
இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகள் :
 1. அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம் சீர்குலைகின்றன.
 2. நமது பெற்றோர், குழந்தைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் பாதிப்படைகிறது.
 3. தொற்றுநோய்கள் பரவுகின்றன.
 4. நமது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிப்படைகிறது.
 5. பள்ளி செல்ல முடியாமல் போய் விடுகிறது.
 6. ஆழ்ந்து கல்வி கற்கமுடியாமல் போய்விடுகிறது.
 7. மனநிலை பாதிப்படைகிறது.
 8. நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து விளையாட முடியாமல் போய்விடுகிறது.
 9. அவசர கால நிலைமைகள் ஏற்படுகிறது.
 10. பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.
 11. சாலைகள் துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு
 12. உற்பத்தி குறைவு, பொருட்களின் பற்றாக்குறை இதன் மூலம் விலைவாசி ஏற்றம்.

மறுவாழ்வு பணிகள் :

நமது ஊரில் உள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகளை கண்டறிதல்.

தண்டோரா போடுதல், தெரு முனைக்கூட்டம். வாகனப்பிரச்சாரம், உள்ளூர் கேபிள் டி.வி. ஒளிபரப்பு, ரேடியோ, துண்டு பிரச்சாரம், கிராம மின் எச்சரிக்கை தகவல் மையம், மிதவை உடை, மூடிய தகர டப்பா, ட்ரம், மரங்கள், பெரிய பிளாஸ்டிக் குடங்கள், மிதக்கும் மரங்கள் பயன்படுத்துதல்.

புயல் பாதுகாப்பு இல்லம், உயரமான கட்டிடம், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், தேவாலயம், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றின் உதவியுடன் கிராமக் குழுக்கள், நிவாரண குழுக்கள், VAO, RI, R.D.O,  தாசில்தார், மாவட்ட ஆட்சியர் தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், JRC, NCC, NSS போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

தகவல் தொகுப்பு :
A.அற்புதராஜ், ஒருங்கிணைப்பாளர்,
ஆவன காப்பு, கும்பகோணம்.